மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசு, நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமலும், நிவாரணம் அளிக்காமலும் டெல்டா விவசாயிகளை வஞ்சிப்பதாகக் கூறி, தஞ்சாவூரில் திமுக கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதியும், திமுக விவசாய அணி மாநிலச் செயலருமான ஏ. கே. எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுடன் தமிழக அரசு கோரியதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஈரப்பதத் தளர்வை அறிவிக்காமல் ரத்து செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இலவச மின்சார திட்டத்தை பிரதமர் ரத்து செய்வதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி