தஞ்சாவூர்: வாக்காளர் பட்டியல் திருத்தம்; வருவாய் அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பண்டாரவாடை, வடக்கு மாங்குடி, அய்யம்பேட்டை பகுதிகளில் இந்தப் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டாட்சியர் பழனிவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி