தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினம்தோறும் 400 மேற்பட்ட பொதுமக்கள் புற நோயாளிகளாக மருத்துவம் பார்த்து செல்கின்றனர் அம்மாபேட்டை பகுதி மக்களும் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள பொதுமக்களும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாமல் தீக்காயம், மாரடைப்பு, விஷக்கடிகளுக்கு, அவசர சிகிச்சை பெற முடியாமல் இறப்பு ஏற்படுகிறது ஆகவே இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் அவர்களிடம் கோரிக்கை மனுவை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே. ராஜாராமன் வழங்கினார் உடன் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார் ஒன்றிய நிர்வாகிகள் எஸ். திருநாவுக்கரசு டி. ராஜேந்திரன்உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்