அம்மாபேட்டை அருகே மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அம்மாபேட்டை பல்லவராயன் பேட்டை பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் மழை நீரில் மூழ்கிய வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி