தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (குரூப் 2 மற்றும் 2ஏ) கொள்குறி வகை தேர்வு ஞாயிற்றுக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் தேர்வு எழுத வந்த 450 பேர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பிற்பகலில் நடைபெறவிருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது.