இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி தனது மகனிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து பூபதி அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அதே தெருவில் வசிக்கும் கொத்தனார் செந்தில் (39) என்பவர் தனது தாயாரின் தோட்டை திருடியிருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே செந்தில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகரஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று செந்திலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி பாப்பாத்தி நகையை திருடியதை செந்தில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.