சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாபநாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சுமதி வில்சன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா, பாபநாசம் நகர தலைவர் திருஞானம், மத்திய நலப்பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பட்டாசு பிரபு, பாபநாசம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட விவசாய அணி தலைவர் ஐயம்பெருமாள், பாபநாசம் ஒன்றிய பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பாபநாசம் ஒன்றிய துணைத் தலைவர்கள் சங்கர், புருஷோத்தமன், பாலகிருஷ்ணன், பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் பொன்பேத்தி மணிகண்டன், ராஜகிரி கலையரசன், வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்களை பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு கைது செய்து பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.