தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மற்றும் அதே அளவில் மற்றொரு நல்லப்பாம்பு இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சுமார் 1 மணி நேரம் நடனம் ஆடின. இதை அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்து பகிர்ந்தனர். மக்கள் கூட்டம் கூடியபோதும் பாம்புகள் அசராமல் நடனமாடின. பின்னர் அவை பிரிந்து சென்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.