தஞ்சை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுபெற்ற எஸ்.ஐ-க்கு பிடிவாரண்ட்

திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய சரகத்தில் 2023-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வு பெற்ற எஸ்.ஐ. சுப்பிரமணியனுக்கு கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ. சுப்பிரமணியன், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜியாவுர் ரகுமான் உத்தரவிட்டார். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி