சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 300 பேர் கைது

தஞ்சை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும் 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் 16-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையம் முன்பிருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் நிலையம் அருகே சாலை மறியல் செய்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் எம். எல். ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி