கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு தலா 2500 டன் புழுங்கல் அரிசி

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து இன்று 5000 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 2500 டன் என மொத்தம் 5000 டன் அரிசி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி