தஞ்சாவூர் மாவட்டத்தில், டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 111 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 73 குடிசை வீடுகளும், 38 ஓட்டு வீடுகளும் அடங்கும். மேலும், 11 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர் குறித்தும் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.