தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூர் மேலத்தெருவைச் சேர்ந்த பானுமதி (68) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, தண்ணீர் கேட்டு வந்த வாலிபர் அவரைத் தாக்கி கழுத்தில் இருந்த சுமார் 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அஜித்குமார் (29) என்பவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஒரத்தநாடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.