தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸ்துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவலர்களாகப் பணியாற்ற விருப்பம் உள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது exweltnj@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பதிவு செய்யலாம்.