தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடக்கூர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி கிராம மக்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் - வெட்டிக்காடு சாலையில் மரக்கிளைகள் மற்றும் முள்செடிகளைப் போட்டு போக்குவரத்தை மறித்து, 'எங்கள் ஊருக்கு மதுக்கடை வேண்டாம்' என ஆவேசமாக கோஷமிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கடும் எதிர்ப்பால், கடை தற்காலிகமாக மூடப்பட்டது.