தஞ்சாவூா் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது, ஒன்றிய அரசு துறை திட்டங்களுக்காக 2024-25 நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 21,319 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 56,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ. 17,674 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 45,506 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ. 27,316 கோடி, பீகாருக்கு ரூ. 27,123 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடு குறைவு என்றும், இதனால் மாநிலத்தின் வளர்ச்சியும் சமூக நலனும் பாதிக்கப்படுவதாகவும் அவர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலில் தெரிய வந்துள்ளது.