தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அருமலை கிளை ஆற்றில் கழுத்து முறிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. திங்கள்கிழமை அன்று ஆற்றில் பாலத்தடுப்பு சுவற்றில் அமர்ந்திருந்தபோது தவறி பின்புறமாக விழுந்ததில் கழுத்து முறிந்து உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர் ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி தமிழரசன் (58) என அடையாளம் காணப்பட்டார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.