இதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொய்த்தாநல்லூர் வேப்ப மரத்தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அருள்செல்வம் (18), தஞ்சாவூர் மனோஜிப்பட்டி வன துர்கா நகர் வர்கீஸ் என்பவரின் மகன் சூரிய பிரகாஷ் (20), தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கார்த்திக் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ராஜ் கண்ணன் (21) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் மூவரும் விற்பனைக்காக 1,300 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் என்று கூறப்படுகிறது.