தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 111 தேர்வு மையங்களில் மொத்தம் 26,854 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 333 பேர் தேர்வு எழுத வரவில்லை. பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்த நிலையில், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்குக் கடும் தடை விதிக்கப்பட்டது. வரும் மார்ச் 26-ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.