அதன்அடிப்படையில், எதிர்வரும் 27.03.2025 (வியாழக்கிழமை) அன்று, திருவோணம் வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு 27.03.2025 அன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 27.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில், திருவோணம் வட்டம் ஊரணிபுரம் மெயின்ரோடு (KR பஸ் ஸ்டாப் எதிர்புறம்) உள்ள ஸ்ரீ லெஷ்மி மஹாலில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் வந்து அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு