தஞ்சை: கட்டப் பஞ்சாயத்து கூடாது..முக்கிய தகவல்

சாதி வன்கொடுமை வழக்குகளில் அலுவலர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச. தமிழ்வாணன் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:வன்கொடுமைகளைப் பொருத்தவரையில் மற்ற மாவட்டங்களை விட தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்சாட்டுகள் அதிகமாக இல்லை. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட ஒரத்தநாடு பகுதியில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், காவல் துறைக் கண்காணிப்பாளரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால்தான் உண்மை நிலை தெரிய வரும். சில வழக்குகள் அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வராமல், அவர்களுக்குள் முடித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, வன்கொடுமைகள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே நிகழ்கின்றன. அதை அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சாதி வன்கொடுமை வழக்குகளில் அலுவலர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்காமல், சட்டப்படி செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம்" என்றார் தமிழ்வாணன்.

தொடர்புடைய செய்தி