அந்த வகையில் வயல்களில் தண்ணீர் நிரப்பி டிராக்டர் மூலம் உழவு செய்வது, நாற்றங்கால் தயாரிப்பது, பாய் நாற்றங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி குடந்தை பைபாஸ் சாலை திட்டை, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த காட்டுப்பன்றிகள், நாற்றங்கால் தயாரிக்கும் வயல்களில் சென்று நாற்றங்காலை சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் இடத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரிய விட்டு காட்டுப்பன்றிகள் வருவதை தடுத்து வருகிறார்கள்.
இருப்பினும் ஒரு சில பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் காட்டுப்பன்றிகள் தொல்லையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்