பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கான நிரந்தர கிடங்குகளும் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரிவை செய்வதற்கான நவீன அரிசி ஆலைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தி வருகிறது.
தற்போது ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (NCCF) மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எந்த உள்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதியளிப்பது நாளடைவில் நெல்கொள்முதலை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சியாகும். எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும் என்றார்.