தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக நடிகர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்குச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த ரசிகர்கள், ஓடும் வாகனத்தில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு செல்ஃபி எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.