இதில், அருகிலுள்ள பாதுகாப்பான முதியோர் இல்லங்கள் பற்றிய விவரங்கள், உடல் நலம் பேணுவதற்கான மருத்துவமனைகளின் விவரங்கள், உடனடியாக மருந்துகளைப் பெறுவதற்கு அருகிலுள்ள மக்கள் மருந்தகம், முதியோருக்கான மத்திய, மாநில திட்டங்கள், முதியோரை சட்ட ரீதியாக பாதுகாக்கும் பொருட்டு மாவட்டச் சட்ட சேவைகள் ஆணையம், அலுவலர்கள் விவரங்கள், அன்றாடம் உடல் நலம் பெறுவதற்கான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் ஆகியவை உள்ளன. முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் குறைகளைச் சரிசெய்து அவர்களின் நலமான வாழ்க்கைக்காக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இச்செயலி மற்றும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.