தஞ்சை: பள்ளி ஆசிரியர்களுக்கு எம்.பி நேரில் பாராட்டு

பள்ளிகளை தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் பனையக்கோட்டை, பொன்னாப்பூர், கருக்காடிப்பட்டி, திருமங்கலக்கோட்டை கீழையூர், நெய்வாசல், நாட்டுசாலை, சிரமேல்குடி, கழுகுபுலிக்காடு, ஆவணம், கரிசவயல், வல்லம், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர், மேலதிருப்பந்துருத்தி, ஆலங்கோட்டை ஆகிய பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இந்த பள்ளிகளுக்கு முரசொலி எம்.பி. நேற்று நேரில் சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முதல் கட்டமாக தஞ்சையை அடுத்த நெய்வாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை எம்.பி. நேரில் சென்று பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி