தஞ்சாவூர்: பட்டதாரியிடம் இணைய வழியில் ரூ. 6 லட்சம் மோசடி

தஞ்சாவூர் அருகே, லண்டன் புற்றுநோய் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 54 வயது எம்.சி.ஏ. பட்டதாரி ஒருவரிடம் ரூ. 5.94 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜூன் மாதம் வந்த மின்னஞ்சலை நம்பித் தொடர்பு கொண்ட பட்டதாரிக்கு, மர்ம நபர்கள் போலியான பணி நியமன ஆணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர். இதை உண்மை என நம்பி பணத்தை அனுப்பியுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி