இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியபோது, “எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் புழுக்கள்
உள்ளதாக 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நீரை அருந்தினால் நோய்த் தொற்று ஏற்படும் என அச்சமாக உள்ளது. நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டதாக கூறுகின்றனர். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.