இதையடுத்து ஆதீனத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ஆதீனம், தான் மடத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கிருந்த ஆத்மார்த்த மூர்த்தி ஐம்பொன் சிலைகள், நந்தி பெருமான், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் சிலைகள், மரகதக் கற்கள் ஆகியவை காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டு, இது குறித்து விசாரணை செய்ய வேண்டும், ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.
ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "நான் கடந்த 2022 முதல் சூரியனார் கோயில் ஆதீன 28வது குரு மகா சன்னிதானமாக இருந்து வருகிறேன். கடந்த வருடம் பாபு என்கிற ரத்தினவேல், திருமங்கலகுடி அப்போதைய சூரியனார் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் மற்றும் சிலர் சமூக விரோதிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் என்மீது போலியாக விமர்சனம் செய்து மானபங்கப்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பிவிட்டார்கள். இது ஏன் என்று பதற்றத்தில் அப்போது எனக்குப் புரியவில்லை."