ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் மையத்தடுப்பு ஓரங்களில் படிந்துள்ள மண்குவியலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில், திருவோணம் முதல் ஊரணிபுரம் வரை உள்ள மையத்தடுப்புகளில் குப்பை மற்றும் மண் படிந்து விபத்துக்களை ஏற்படுத்தி வந்தன. கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி கோட்ட பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.