ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.