தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்துள்ளாா். பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இதனால், பல கிராமங்கள் பாதிக்கப்படும்.