தஞ்சாவூரில் போலீசாரின் வாகனங்கள்: டிஐஜி ஆய்வு

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்கள், உடைமைகளை டிஐஜி ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள், அவர்களது துப்பாக்கிகள், மற்றும் உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. 

இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் வேன்கள், ஜீப்புகள், கலவர பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதை தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களின் ஆவணங்களையும் அவர் சரிபார்த்தார். 

அப்போது அந்த வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீசாரின் கவசங்களையும் உடைமைகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி