இதேபோல காவிரி, வெள்ளாறு பாசனப் பகுதி 267 கிராம விவசாயிகளுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.51 கோடி 12 லட்சத்து 70 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு வாரங்களில் வரவு வைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காலம் தாழ்த்தி குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு ரூபாய் 8.65 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக மொத்தம் ரூபாய் 104.68 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி