பட்டுக்கோட்டை: 10-வது வார்டில் புதிய சிமெண்டு சாலை அமைப்பு

பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2025 - 2026-ன் கீழ் மயில்பாளையம் குறுக்குத்தெரு (நாடி மருத்துவமனை சாலை) சிமெண்டு சாலை ரூ. 17 லட்சம் செலவில் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்து சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தவார்டு கவுன்சிலர் பொன்மணிராஜேந்திரன் வரவேற்றார். 

நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை தாங்கி சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தி. மு. க நகர செயலாளர் செந்தில்குமார். தி. மு. க. தலைமை பேச்சாளர் மணிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில் நகராட்சி அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி