பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலரும், துணை ஆட்சியருமான சாந்தி, திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசண்முகம், நெய்வேலி வடபாதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே. பாண்டியன், வாட்டாத்திக்கோட்டை ஆர். பன்னீர் செல்வம், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மனைப்பட்டா, பட்டா மாற்றம், மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, காப்பீட்டு அட்டை, நலவாரியம், கடன் உதவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் நன்றி கூறினார். இதில், மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.