ஒரத்தநாடு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சாத்தனூர் பகுதியை சேர்ந்த மீனா (31) நேற்று காலை உளூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு தனது மகள் மற்றும் மாமியாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தலையாமங்கலம் பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மீனாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஓரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபர்களைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி