தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் காரல் மார்க்ஸின் 208-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிபிஎம் நகரச் செயலாளர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த தோழர் சின்னப்பொண்ணு கொடியேற்றி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுதா என்பவருக்கு ரூ. 3, 200 நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் சிபிஎம் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.