ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் (பொ) நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மின் நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடுகீழையூர், பின்னையூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையலாம்.