ஒரத்தநாடு: மேய்ச்சலுக்கு கொண்டு வரப்பட்ட வாத்துகள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் வாத்துகள் மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இயற்கை உரத்திற்காக வயலில் வாத்துகள் கொண்டு வரப்படுகின்றன. ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக தங்கி இருந்து வாத்துகளை மேய்த்து வருகின்றனர். ஒரத்தநாடு அருகே கண்டிதம்பட்டு, வாளமர்கோட்டை, நெய்வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

பெரும்பாலான வயல்களில் அறுவடை பணிகள் முடிவடைந்து தரிசாக இருப்பதால், இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. வாத்துகளுக்கு ஒரே இடத்தில் வைத்து தீவனம் வைப்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயலில் வாத்துகளை மேய்ச்சலுக்காக விடுகின்றனர். இதனால் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாத்துகளின் எச்சம் நல்ல உரமாக அமையும் என்பதால் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். 

மேலும் இவர்களிடம் வாத்து முட்டைகளை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் கடைகளுக்கும் சென்று வாத்து முட்டைகளை விற்பனை செய்கின்றனர். ஆந்திரா போன்ற பகுதிகளில் வாத்துகள் இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் நிறைய இடங்களில் வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி