ஒரத்தநாடு: முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று சித்திவிநாயகர், தேவி முத்துமாரியம்மன், வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர் பரிவாரதெய்வங்கள் மற்றும் நுழைவுவாயில்கள் ஆகியவை அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

குடமுழுக்கு முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முறைப்படியான பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை யாகசாலையிலிருந்து யாத்திரா தானம், கடம் புறப்பட்டு கோவில்களின் கோபுரங்கள் மற்றும் நுழைவுவாயில் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. சுவாமி புறப்பாடு, கலைநிகழ்ச்சி நடைபெற்றன. சுவாமி வீதிஉலா குடமுழுக்கு ஏற்பாடுகளை வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி