இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் அக். 2, புதன் கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தினை சிறப்பித்திட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்