ஒரத்தநாடு அருகே மர்ம பொருள் வெடித்து சிதறி பொதுமக்கள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி ஆற்றங்கரை பாலம் ஓரமாக, சோழபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் எரிந்து கொண்டிருந்த குப்பை புகை மூட்டத்தில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், அந்த வழியாக சென்ற சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி (32) என்பவர் கழுத்தில் காயமடைந்தார். மேலும், சாலை ஓரமாக நடந்து சென்ற பொதுமக்களும் காயமடைந்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி