தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டை அடுத்துள்ள தெலுங்கன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகன். இவருடைய மகன் முகிலன் வயது இவர் தேற்று முன் தினம் இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஓரத்தநாடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பாளம்புத்தூர் மின்சார அலுவலகம் அருகே சென்ற போது அதே சாலையில் எதிரே வந்தஒருகார் முகிலன் ஓட்டிச் சென்ற பைக் மீது லாரி மீது மோதியது. இதில்படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முகிலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் முகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஓரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.