பாப்பாநாடு கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஓரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என். சுரேஷ்குமார், பி. செந்தில்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ. வசந்தி,
அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசு ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ வசதி, அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு, இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.