தஞ்சை: பைக்கில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

ஒரத்தநாடு அருகே தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் வீரசேகர் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 8.30 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி