தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 17ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும், 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.