தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் மழை போல் பணி கொட்டத் தொடங்கியது. காலை 9 மணி ஆகியும் பனிமூட்டம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கடந்த சில தினங்களாக கடும் குளிரும், அதிக பனிமூட்டமும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி