ஒரத்தநாடு சந்தைப்பேட்டையில் சுகாதாரக்கேடு

ஒரத்தநாடு சந்தைப்பேட்டையில் சுகாதாரக்கேடு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரத்தநாடு சந்தைப்பேட்டையில் மீன், கறி, கோழி, கருவாடு உள்ளிட்ட அசைவ பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன. சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அசைவ உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில் சந்தைப்பேட்டையில் ஒரு வாரகாலமாக தண்ணீர் இன்றி அசைவ விற்பனையாளர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மீன், கோழி, கறி, கருவாடுகள் சுத்தம் செய்யும் கழிவுகளை தண்ணீர் இன்றி ஆங்காங்கே முட்டு முட்டாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு சந்தைப்பேட்டையில் துர்நாற்றம் வீசுவதால் அசைவ உணவுகள் வாங்கும் பொதுமக்கள் முகம் சுளிக்க கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரத்தநாடு சந்தைப்பேட்டை சுகாதாரத்துடன் இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி