அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் கட்டும் பணி தீவிரம்

தஞ்சை பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை முடிந்த வயல்களில் விவசாயிகள் எந்திரங்கள் மூலம் வைக்கோல்களை கட்டுகளாக கட்டி வருகின்றனர். இதனால் வயல்களில் வைக்கோல் கட்டுகள் அதிகளவில் குவிந்துள்ளன. எந்திரம் மூலம் ஒரு வைக்கோல் கட்டு கட்ட ரூ. 40 கூலி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ. 120 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தருகிறது.

தொடர்புடைய செய்தி